சென்னை: அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடைஉத்தரவை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் விளை நிலங்களை வீ ட்டுமனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு தடை உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் 'யானை' ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முன்னரே சில உத்தர வுகளை நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்திருந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு தெரிவித்ததாவது:
அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை வரன்முறை செய்வதற்கு நீதிமன்ற உத்தரவின் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணைகளின் கீழ் பத்திரப்பதிவு செய்யலாம். ஏற்கனவே வீட்டு மனைகளாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறுபதிவு செய்யலாம் என்ற சட்டத்தின் கீழும் பத்திரப்பதிவு செய்யலாம்.
மேலும் 21.04.2017 முதல் இன்று வரை பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைப் பதிவுகள் சட்டவிரோதம் ஆகும். அத்துடன் 09.09.206 முதல் 28.03.2017 இடையிலான அனைத்து பத்திரப்பதிவுகளும் சட்டவிரோதமே ஆகும். . இந்த வழக்கில் இறுதித்தீர்ப்பு வரும் வரை பத்திர பதிவுகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டதாகும்.
இதன் அடிப்படையில் பத்திரவு பதிவு செய்தவற்கான தடை தளர்த்தப்படுகிறது. மேலும் இந்த வழக்கு விசாரணை ஜூன் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் பட புரோமோ!

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

விஜய் லாலிபாப் சாப்பிடும் லிட்டில் பாய்: பிரேமலதா கடும் தாக்கு

இருவருக்கு ரெட் கார்டு: ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பயர்ன் மியூனிக்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


