பண்ருட்டியில் தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பு: மக்கள் அவதி
பண்ருட்டி அருகே தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


பண்ருட்டி அருகே தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பண்ருட்டியில் அரசு பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதில், இன்று பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்கவில்லை. கிரம பகுதியில் நகர பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். தனியார் பேருந்துகளில் அரசு போக்குவரத்து தொழிலாளர் ஈடுபட்டுள்ளதால் தனியார் பேருந்துகள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். அவர்கள் வழங்கும் பயண சீட்டில் பேருந்து குறித்து எந்தவித தகவலும் இல்லாத பயணசீட்டை வழங்குகின்றனர்.
அண்மையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தன்னிசையாக பேருந்து கட்டணத்தை உயர்த்திக்கொண்ட நிலையில் பொதுமக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டது.
இதனிடையே, ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்து மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் பெரும்பாலான பேருந்துகளில் ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு தொடர்ந்து கூடுதல் கட்டணம் பயணிகளிடம் வசூலித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...