ஜெயலலிதாவைப் போன்றவர் அல்ல எடப்பாடி பழனிசாமி: நடராஜனின் 'அடடே' பேட்டி!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போன்றவர் கிடையாது ...


சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போன்றவர் கிடையாது என்று அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
தற்போது தமிழக அரசு சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகுத்த வழியில்தான் அது பயணிக்கிறது. தற்பொழுது எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் அனைத்து அமைச்சர்களும் கலந்து பேசித்தான் எடுக்கப்படுகின்றன.
ஆனால் அரசு இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். ஒரே மாவட்டத்தில் அதிக ஆண்டுகள் பணியாற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் உடனடியாக மாற்றப்பட வேண்டும். அவர்களுக்கு பதிலாக அதிக செயல்திறன் உடைய அதிகாரிகள் அங்கே நியமனம் செய்யபட வேண்டும்.
ஒரே பார்வையிலே அதிகாரிகள் விரைந்து செய்லபடுவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒன்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போன்றவர் கிடையாது. எனவே அதிகாரிகள் கொஞ்சம் அசட்டையாக இருக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.
தமிழக அரசு தற்பொழுது நிதி நெருக்கடியில் இருக்கிறது. மத்திய அரசும் தன் பங்கிற்கு மானியங்கள் எதுவும் வழங்குவதில்லை அத்துடன் நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூடும் உத்தரவினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக பஸ் கட்டணம் மற்றும் விலைவாசியைத்தான் உயர்த்த வேண்டும். அப்படி செயல்பட முடியுமா?
இந்த அரசு வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை பூர்த்தி செய்யும் என்று நான் நம்புகிறேன். அதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள். அதற்கு மத்திய அரசும் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...