கடலூரில் கூட்டுறவு வங்கியின் 31-வது கிளை திறப்பு விழா
கடலூர் மாவட்டம் கூட்டுறவு வங்கியின் 31-வது கிளையினை தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் தொடங்கி வைத்தார்.


பண்ருட்டி: கடலூர் மாவட்டம் கூட்டுறவு வங்கியின் 31-வது கிளையினை தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தனது வாடிக்கையாளர் சேவையில் 100-வது ஆண்டு அடியெடுத்து வைக்கிறது.
இவ்வேளையில், கூட்டுறவு வங்கியின் 31-வது கிளையினை நெய்வேலி வட்டம் 29-ல் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொழிற்துறை அமைச்சர் எம்.சி சம்பத் திறந்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு பாஸ்புக் வழங்கினார்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கார்த்திக், ராஜேஷ், கூட்டறவு வங்கியின் தலைவர் பி.ரவிச்சந்திரன். இயக்குநர் வா.சி கோமதி, மண்டல இணைப் பதிவாளர் சோ.இளஞ்செல்வி, பொதுமேலாளர், ஜி.சுந்தர்ராஜன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு துணைத் தலைவர் ராஜசேகர், நெய்வேலி நகரச் செயலர் கோவிந்தராஜ், மாவட்ட தொழில்நுட்ப செயலர் பாபு, நிர்மலா கூட்டுறவு சங்க செயலர் பி.தனவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...