

சென்னை: தமிழகத்தில் விழுப்புரம்,தர்மபுரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மூன்று மூன்று இடங்களில் புதிய சட்டக் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையின் மூன்றாவது கூட்டம் இன்று மதியம் நடந்து முடிந்தது. அதன் பிறகு தமிழகத்தில் விழுப்புரம்,தர்மபுரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மூன்று இடங்களில் புதிய சட்டக் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்த அணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2017-18-ஆம் கல்வி ஆண்டிலேயே இந்த மூன்று புதிய சட்டக் கல்லூரிகளும் துவங்கப்படும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் வாயிலாக இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். ஆண்டுக்கு 20 மாணவர்கள் என்ற அடிப்படையில் முதல்கட்டமாக 3 மற்றும் 5 ஆண்டு பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான இதர பணிகளுக்காக ரூ.6.81 கோடி ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அரசாணை தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.