ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையை அடுத்த அம்பத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், கோடை வெயில் காரணமாக பள்ளிகள் தாமதமாக ஜூன் 7ஆம் திறக்கப்பட உள்ளது.
பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். தொடர்ந்து ஒரே வாரத்தில் பஸ் பாஸ் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடும் வெயில் காரணமாக மேலும் ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...