டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அனைத்து உணவுப் பொருள்களிலும் சோதனை நடத்த முதல்வர் உத்தரவு: ராஜேந்திர பாலாஜி

அனைத்து வகை உணவுப் பொருள்களையும் சோதனை செய்ய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக பால் வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

DIN

அனைத்து வகை உணவுப் பொருள்களையும் சோதனை செய்ய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக பால் வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
முதல்வரிடம் இதுவரை நடந்த சம்பவங்கள் பற்றி எடுத்துரைத்தேன். அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, தலைமைச் செயலாளர், உணவுப் பாதுகாப்பு ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார்.
பாலில் கலப்படம் செய்வது மிகப் பெரிய குற்றம், இதில் நமது அரசு பின்வாங்கக் கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அவரது அறிவுரையை ஏற்று பணிகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.
கலப்படம் கண்டுபிடிப்பு: தனியார் பாலில் நாங்கள் ஆய்வு செய்த முடிவுகள் வந்துள்ளன. பாலில் பார்மால்டிஹைடு, ஹைட்ரஜன் பெராக்சைடு, யூரியா, காஸ்டிக் சோடா போன்ற வேதிப் பொருள்களோடு, கிழங்கு மாவும் கலக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனால் இதய நோய் தொடர்புடைய அனைத்து நோய்களும் வரும். உடனே
இல்லாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக மனிதனைக் கொல்லும் விஷங்கள் அவை. இந்த வேதிப் பொருள்கள் எங்கே கிடைக்கின்றன என்ற தகவலும் எனக்கு வந்துள்ளது.
கடும் நடவடிக்கை: தனியார் பாலில் கலப்படம் இருக்கிறது என்பது 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 அல்லது 4 ஆண்டுகள் தொடர்ந்து அந்தப் பாலை குடித்தால், இதயம், சிறுநீரக, ஈரல் நோய்கள் வரும். பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.
அந்த நிறுவனங்களை மூடும் நடவடிக்கையை சட்டப்படி இப்போது மேற்கொள்ள முடியாது. ஆனால் மக்களை எச்சரித்துள்ளோம்.
பாலில் தண்ணீர் கலந்தால் அதற்கேற்ற நடவடிக்கை, யூரியா, காஸ்டிக் சோடா கலந்திருந்தால் அதுசம்பந்தமான நடவடிக்கை என தனித்தனியாக நடவடிக்கை எடுப்போம். அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உரிமம் ரத்தாகும், கம்பெனி மூடப்படும், வழக்குத் தொடரப்பட்டு கைது நடவடிக்கையும் எடுக்கப்படும்.
70 தனியார் நிறுவனங்களில் பாதி ஒழுங்காகச் செயல்படுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக ஆளைக் கொல்லும் கலப்படம் இது.
மருத்துவமனையில் இதய நோய், சிறுநீரக கோளாறு என்று போனால் அதற்குத்தான் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். ஆனால் பால் கலப்படத்தால்தான் நோய் வந்தது என்று நிரூபிக்க முடியாது.
சந்தேகத்துக்கு உரிய 20 நிறுவனங்களின் பாலில் சோதனை நடைபெறுகிறது. பால் கெட்டுப்போய் தயிர் போல் ஆகிவிட்டால், காஸ்டிக் சோடா போட்டு கலக்குகின்றனர். அரை மணி நேரத்தில் மீண்டும் பாலாகி விடுகிறது. இதுவரை 2 கம்பெனிகளின் முடிவுகள் வந்துள்ளன.
முதல்வர் உத்தரவு: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் உத்தரவுப்படி ஆவின் பால் மற்றும் அனைத்து உணவுப் பொருள்கள் மீதான சோதனை தொடரும்.


ஆவின் விற்பனை அதிகரிப்பு

தனியார் பால் கம்பெனிகள் மீது கலப்படக் குற்றச்சாட்டுக்குப் பின் ஆவின் பால் விற்பனை அதிகரித்திருப்பதாக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவருடைய பேட்டி: நஷ்டத்தில் இயங்கி வந்த ஆவின் பால் நிறுவனம் தற்போது பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு ரூ.361 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
தினமும் ஆவின் பால் நிறுவனத்துக்கு 31 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 25 லட்சம் லிட்டர் பால் விற்பனை ஆகிறது. மீதி பாலை பவுடர் அல்லது பால்கோவா போன்ற பண்டமாக்கி விற்பனை செய்கிறோம். தனியார் பாலை நிறுத்திவிட்டு ஆவின் பாலை நாடினால் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு எங்களிடம் சேமிப்பு வசதியுள்ளது.ஆவினில் 4 வகை பால் பாக்கெட் போடுகிறோம். ஒன்றில்கூட தரம் குறைந்திருப்பதாகவும், வேதிப் பொருள் இருப்பதாகவும் முடிவு வரவில்லை. ஆவினில் தவறு நடந்தால் அதன் அதிகாரியையும் நான் கண்டிப்பேன்.
பால் உற்பத்தியாளர், முகவர் தவறு செய்தாலும் ஆவினுக்குத்தான் கெட்ட பெயர் வரும் என்பதால் உன்னிப்பாகக் கவனிக்கும்படி கூறியிருக்கிறேன். எங்களுக்கு மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.