டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மோரா புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவான மோரா புயல் வங்கதேசத்தை நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

DIN

வங்கக் கடலில் உருவான மோரா புயல் வங்கதேசத்தை நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது:
மோரா புயலால் தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை. கேரளத்தில் செவ்வாய்க்கிழமை (மே 30) தென்மேற்குப் பருவமழை தொடங்கச் சாதகமான சூழல் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றார்.
இன்று கரையைக் கடக்கும்: வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை மோரா புயலாக மாறியுள்ளது. மோரா புயல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும்.
தற்போது கொல்கத்தா அருகே 600 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும். கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், பாம்பன், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.