தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம்: ஓ. பன்னீர்செல்வம்
தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் ஏற்படும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் ஏற்படும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாக நடத்தி வந்தனர். ஆனால், தற்போது ஆட்சியும் கட்சியும் ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் சிக்கி உள்ளது. குடும்ப ஆதிக்கம் எப்போது முடிவுக்கு வருகிறோ அப்போதுதான் கட்சியும் ஆட்சியும் சிறப்பாக செயல்படும்.
மாநிலம் முழுவதும் கட்சித் தொண்டர்களை சந்தித்து செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறோம். வரும் அக்டோபர் மாதத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வதாக உறுதி அளித்துள்ளார். ஆட்சி நீடிப்பதும் நீடிக்காததும் ஆட்சியாளர்கள் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றார் அவர்.
நத்தம் விஸ்வநாதனுடன் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக வந்த தகவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதில் உண்மை இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...