பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முந்திரி, பலா ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ கே.பாலகிருஷ்ணன் பேச்சு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட முந்திரி, பலா விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்...

News image
Updated On :30 மே 2017, 11:30 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

நெய்வேலி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட முந்திரி, பலா விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முந்திரி, பலா பயிர்களுக்கு வறச்சி நிவாரணம் கேட்டு மணு கொடுக்கும் போராட்டம் பண்ருட்டி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு விவாயிகள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் பேசுகையில்,

2015 நவம்பர் மாதம் பெய்த கனமழையால் பண்ருட்டி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் கால்நடைகளை இழந்தனர். விவசாய நிலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதற்கு மத்திய மாநில அரசு நிவாரணமாக நிதி ஒதுக்கியுள்ளது. இதில், கடலூர் மாவட்டத்திற்கு 45 கோடி நிவாரணமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்த அளவு பாதிப்பு கொண்ட நாகப்பட்டினத்திற்கு 85 கோடியும், திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ110 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு நிவாரண  நிதிகளைப் பெற்று தருவதில் அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்யாமல், இருந்த இடத்தில் இருந்து கணக்கீடு செய்துள்ளனர். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கியும் விவசாயிகளுக்கு வழங்காமல் இழுத்து அடித்துக் கொண்டுள்ளனர்.

ஏக்கருக்கு 25 ஆயிரம் தர கோரிக்கை விடுத்ததில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.5,625 நிவாரணம் மட்டுமே வழங்கியுள்ளனர். இதை வைத்து கடனை அடைப்பதா, வாழ்க்கை நடத்துவதா? மா, பலா சாகுபடிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை எனக் கூறினார். ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் சார் ஆட்சியர் ஜானி, தாம் வர்க்கி ஆகியோரைச் சந்தித்து மனுக்களை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.