தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு - முதல்வர் பழனிசாமி உத்தரவு!

அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

DIN

சென்னை: அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு சட்டம் - 2016-ன் படி  மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசுப்பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவானது தமிழக அரசுப் பணிகளுக்கு மட்டுமின்றி பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் என அனைத்திற்கும் பொருந்தும்.

இந்த 4% இட ஒதுக்கீட்டில் 1% பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கும், 1% செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கும், 1% கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மீதமுள்ள 1% அறிவுசார் குறைபாடு உடையவர்களுக்கும் வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து தற்பொழுது மாநில அரசும் அறிவிப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.