வீடு திரும்பினார் நடராஜன்
கல்லீரல் -சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன், சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையிலிருந்து


கல்லீரல் -சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன், சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையிலிருந்து புதன்கிழமை (நவ. 1) வீடு திரும்பினார்.
நடராஜனுக்கு கடந்த மாதம் 4 -ஆம் தேதி (அக்.4), கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர் சிகிச்சையில் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. முழுமையாக குணமடைந்துள்ளதால், அவர் புதன்கிழமை வீடு திரும்பினார்.
இனி மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் அவ்வப்போது அவர் மருத்துவ ஆலோசனை பெறுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...