மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தவறிவிட்டது

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தவறிவிட்டது என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 9:56 pm

DIN

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தவறிவிட்டது என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
திருச்சியில் வியாழக்கிழமை அவர் மேலும் கூறியது:
அரசு நிர்வாகம் என்பது வரும் முன் காப்பதாக இருக்க வேண்டும். மின் வாரியத்தின் அலட்சியத்தால் 2 சிறுமிகள் உயிரிழந்த பிறகு, மின் வாரிய அதிகாரிகளை தாற்காலிக பணிநீக்கம் செய்வது ஏற்புடையதல்ல. பருவமழையையொட்டி அனைத்துத் துறைகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும்.
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தவறிவிட்டது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு நேரமில்லை. கதிராமங்கலம், நெடுவாசல், அணு உலை என பல்வேறு தொடர் போராட்டங்களில் மக்கள் சோர்வடைந்துவிட்டனர்.
பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பணிபுரியும் அரசாக மத்திய அரசு மாறிவிட்டது.
பாஜக கட்சியினரும் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகின்றனர். விமர்சனங்களை ஏற்க முடியாமல் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்துவது, கொடிக் கம்பங்களைச் சிதைப்பது என்பது ஆபத்தானது. இத்தகைய செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது விளை பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாத சூழல் உள்ளது என்றார் அவர்.
கருத்துச் சுதந்திரம் இல்லை: புதுக்கோட்டை மாவட்டம், இச்சடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழாவில் பங்கேற்க வந்த அவர் கூறுகையில், திரைப்படத்தில் ஒரு சமூகத்தை, இறை நம்பிக்கையை, தேசிய பண்பாட்டை, கலாசாரத்தை மத வழிபாட்டை, மொழியை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளைத் தவிர்க்க வேண்டும். அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் திரைப்படம் எடுப்பது தவறில்லை என்றாலும், தற்போது திரைப்படத் துறையில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்றார் அவர். மாநில நிர்வாகிகள் ஜெயசீலன், ஹுமாயூன், மாவட்ட நிர்வாகிகள் கணேசன், வீரப்பன், இளைஞர் பாசறை நிர்வாகி சசி, நகர நிர்வாகி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.