சென்னை: தொடர்ந்து இந்து மதம் குறித்து விமர்சிப்பதன் மூலம் கரண்ட் பெட்டியில் கை வைக்கும் வேலையைச் செய்கிறார் கமல் என்று திரைப்படம் மற்றும் நாடக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
கமல் தனது செய்கைகளின் மூலம் ஒரு மூன்றாந்தர அரசியலில் ஈடுபடுபவர் போல் நடந்து கொள்கிறார். வார இதழ் ஒன்றில் கேரள முதல்வர் பினராய் விஜயன் கேள்வி கேட்டு அதற்கு கமல் பதில் சொல்வது நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. இந்து தீவிரவாதம் என்ற ஒரு தவறான கற்பித்தல் அவருக்கு இருக்கிறது.
ஹாசன் என்று பெயர் வைத்து இருப்பதாலோ என்னவோ இந்துக்களுக்கு எதிரான மனோபாவம் அவருக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. அவர் கேரளாவுடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு எல்லாம் தமிழகம் தாழ்ந்து போய் விடவில்லை.
அப்படி கமலுக்கு கேரளாதான் பிடிக்கும் என்றால் அவர் கேரளாவிலேயே போய் வாழட்டும். சிலருக்கு சிறு வயதில் இருந்தே சில விஷயங்கள் பிடிபடாமல் இருக்கலாம். ஆனால் அதற்காக அவை தவறு என்று ஆகி விடாது.
பொதுவாக இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. ஒழுக்கமான வாழ்க்கை என்பது நமது நடைமுறை. ஆனால் அந்த முறை தேவையில்லை; எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்பவர்களுக்கு இந்து மதம் பிடிக்காது.
தொடர்ந்து இந்து மதம் குறித்து விமர்சிப்பதன் மூலம் கரண்ட் பெட்டியில் கை வைக்கும் வேலையைச் செய்கிறார் கமல் கமல் தேவையில்லாத பிரச்சினைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இவ்வாறு எஸ்.வி.சேகர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


