ஒளிப்பதிவாளர் ப்ரியன் காலமானார்

திரைப்பட ஒளிப்பதிவாளர் ப்ரியன் (54) மாரடைப்பால் சென்னையில் வியாழக்கிழமை (நவ.9) காலமானார். அவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ப்ரியன் காலமானார்
Updated on
1 min read

திரைப்பட ஒளிப்பதிவாளர் ப்ரியன் (54) மாரடைப்பால் சென்னையில் வியாழக்கிழமை (நவ.9) காலமானார். அவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.

மறைந்த பிரபல ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்து பணி கற்றவர் ப்ரியன்.

'பொற்காலம்', 'தேசிய கீதம்', 'வெற்றிக் கொடி கட்டு', 'தெனாலி' உள்ளிட்ட பல திரைப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 'தமிழ்', 'சாமி', 'கோயில்', 'அருள்', 'அய்யா', 'ஆறு', 'வேல்', 'சேவல்', 'சிங்கம்' போன்ற இயக்குநர் ஹரியின் திரைப் படங்களில் பிரதான ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை சுமார் 30 திரைப் படங்களுக்கு ப்ரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் ப்ரியன்.
விருதுநகரில் இன்று இறுதிச் சடங்கு: ப்ரியனின் இறுதிச் சடங்குகள் அவரின் சொந்த ஊரான விருதுநகரில் வெள்ளிக்கிழமை (நவ.10) நடைபெறுகிறது. தொடர்புக்கு - 95000-53609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com