புதிய தலைமைச் செயலருக்கு அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு தர கிரண்பேடி வலியுறுத்தல்

புதிய தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமாருக்கு அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தி உள்ளார்.
புதிய தலைமைச் செயலருக்கு அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு தர கிரண்பேடி வலியுறுத்தல்
Updated on
1 min read

புதிய தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமாருக்கு அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தி உள்ளார்.

புதுவை தலைமைச் செயலாளராக இருந்த மனோஜ் பரிதா தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக தில்லி பொதுப்பணித்துறை செயலாளர் அஸ்வனிகுமார் புதுவை தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் புதன்கிழமை பதவியேற்ற பின் ஆளுநர், முதல்வரை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் புதிய தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் பதவியேற்றது தொடர்பாக கிரண்பேடி கூறியதாவது:
புதிய தலைமைச் செயலாளர் தற்போது பொறுப்பேற்றுள்ளார். அவர் 1992-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தைரியமான நேர்மையான செயல்பாட்டைக் கொண்டவர். தில்லியில் பொதுப்பணித்துறை, கண்காணிப்பு செயலாளராக இருந்தார். விதிகளை தீவிரமாக கடைபிடிப்பவர் என்பதை நான் அறிவேன்.

புதுவையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் நமக்கு சிறந்த வாய்ப்பாகும். அனைத்து அதிகாரிகளும் இதை சீராக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் கருத்துக்களை நேர்மையாக கோப்புகளில் பதிவு செய்யுங்கள். புதிய அதிகாரி பதவியேற்றால், அவருக்கு அனைத்து தகவல்கள், விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

தலைமைச் செயலாளரின் நேரத்தை வீணாக்காத வகையில் அதிகாரிகள் இதை செய்ய வேண்டும். செயல்பாட்டில் உள்ள முக்கிய திட்டங்கள், பயன்படுத்தாமல் உள்ள கட்டடங்கள் குறித்து அவருக்கு விளக்க வேண்டும். மத்திய அரசு உதவியுடன் நடைபெறும் திட்டங்கள், அவற்றின் நிலை, குறித்தும் தெரிவிக்க வேண்டும்.

அனைவரும் இந்த மாற்றத்தை வரவேற்று, முன்பை விட தீவிரமாக உற்சாகமாக பணியாற்ற வேண்டும், புதுச்சேரி ஒட்டுமொத்த சிறப்பான வளர்ச்சி பெறவும், நலம் பெறவும் இணைந்து பாடுபட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com