ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு

ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கும் இடத்தை மாற்றுவது குறித்து 2 வாரத்தில் முடிவெடுக்க அம்மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 7:26 am

DIN

ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கும் இடத்தை மாற்றுவது குறித்து 2 வாரத்தில் முடிவெடுக்க அம்மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பாரதி நகர் பூங்காவில் வரும் 25ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்நிலையில் பூங்காவில் மேடை அமைக்கும் போது விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் மாற்றப்படுவதாக ராஜூ என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கும் இடத்தை மாற்றுவது குறித்து 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.