விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தேசிய திறனாய்வுத் தேர்வு: இன்று முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு

தேசிய திறனாய்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை ('ஹால் டிக்கெட்') வெள்ளிக்கிழமை (நவ.10) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது

News image
Updated On :9 நவம்பர் 2017, 8:16 pm

DIN

தேசிய திறனாய்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை ('ஹால் டிக்கெட்') வெள்ளிக்கிழமை (நவ.10) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-
மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு  வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தொடர்புடைய பள்ளி முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியர்கள்   இணையதளம் மூலம் வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
பள்ளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பயனாட்டாளர் குறியீடு (ன்ள்ங்ழ் ய்ஹம்ங்) மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.