புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள லஷ்மி ஜூவல்லரி மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் தொடர்ந்து 2-வது நாளாக வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
புதுச்சேரி கொசக்கடை வீதியில் பிரபலமான லஷ்மி ஜூவல்லரி உள்ளது. இங்கு வியாழக்கிழமை காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் லஷ்மி ஜூவல்லரிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் அவர்களுக்கு சொந்தமான பிரபல ஓட்டல்களில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதே போல் கடலூர், சிதம்பரத்தில் உள்ள அவர்களது கிளை அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மாலை வரை நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் காலை முதல் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் புதுச்சேரி கொசக்கடை வீதியில் உள்ள லஷ்மி ஜூவல்லரி மற்றும் அவர்களது கிளை நிறுவனங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் உள்ள நகை கடை அதிபர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.