இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். 
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
Updated on
1 min read

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். 

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 200க்கும் மேற்பட்ட படகுகளில் நேற்றுமுன் தினம் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று காலை பருத்தித்துறை கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். 

அப்போது அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்கள் பயன்படுத்திய படகு ஒன்றையும் பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரையும் விசாரணைக்காக இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com