ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை: விசாரணை அறிக்கை 8 மாதங்களில் தாக்கல்: நீதிபதி ராஜேஸ்வரன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய 8 மாதங்கள் ஆகும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கூறினார்.
ஜல்லிக்கட்டு விசாரணையின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் (நடுவில் அமர்ந்திருப்பவர்). உடன், (இடமிருந்து) விசாரணை ஆணையச் செயலர் மோகன், வழக்குரைஞர் ராஜசேகர்.
ஜல்லிக்கட்டு விசாரணையின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் (நடுவில் அமர்ந்திருப்பவர்). உடன், (இடமிருந்து) விசாரணை ஆணையச் செயலர் மோகன், வழக்குரைஞர் ராஜசேகர்.
Updated on
1 min read

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய 8 மாதங்கள் ஆகும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கூறினார்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை நடத்தி வருகிறார். 
இதுதொடர்பான விசாரணைக்காக அவர், சேலத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்தார். அவர் அஸ்தம்பட்டியில் உள்ள பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையில் இரு நாள்கள் தங்கி, 11 பேரிடம் விசாரணை நடத்துகிறார்.
முதல் நாளான வியாழக்கிழமை 7 பேரிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, 4 பேரிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்துகிறார்.
இதுகுறித்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 1,951 பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதில் 447 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 108 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 
சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களிடம் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சுமார் 8 மாதங்கள் ஆகும். 
போராட்டத்தின்போது கருத்துக் கூறிய நடிகர்களுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, ஜனவரி முதல் விசாரணை நடத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com