எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நிதி நிறுவனத்தில் ரூ.86 லட்சம் கையாடல்: கணக்காளர் கைது

கரூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.86.32 லட்சம் கையாடல் செய்த கணக்காளரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த பெண் உதவியாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:10 pm

DIN

கரூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.86.32 லட்சம் கையாடல் செய்த கணக்காளரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த பெண் உதவியாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் பசுபதிபாளையம் அருணாசல நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (59). இவர், கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் கரூர் பைனான்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரிடம் தெற்கு காந்திகிராமம், இந்திரா நகரைச் சேர்ந்த கே.தண்டபாணி (47), கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக கணக்காளராகவும், பசுபதிபாளையத்தைச் சேர்ந்த மாணிக்கம் மனைவி சுதா(38) உதவியாளராகவும் பணிப்புரிந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன் நிதி நிறுவனத்தின் வரவு -செலவு கணக்கை சரி பார்த்துள்ளனர். அப்போது, கடந்த 20.9.2012 முதல் தண்டபாணியும், சுதாவும் சேர்ந்து ரூ.86.32 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜேந்திரன் புதன்கிழமை இரவு இருவர் மீதும் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து தண்டபாணியை கைது செய்தனர். தலைமறைவான சுதாவை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.