ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஹார்வர்டு தமிழ் இருக்கை: கமல்ஹாசன் ரூ.20 லட்சம்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் அளித்துள்ளார்.

News image
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கை நிதிக்கு ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை வழங்குகிறார் நடிகர் கமல்ஹாசன். 
Updated On :17 நவம்பர் 2017, 4:47 am

DIN

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் அளித்துள்ளார்.
அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த திரை பிரபலங்கள் பலரும் தங்களது பங்களிப்பாக இதற்கு நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் தமிழ் இருக்கை அமைப்பதற்காக ரூ. 20 லட்சம் நிதி அளித்துள்ளார். இதற்கான காசோலையை சென்னையில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியொன்றில் நடிகர் கமல்ஹாசன் வழங்கினார். 
லண்டனைச் சேர்ந்த முனைவர் ஆறுமுகம் முருகையா, அமெரிக்காவைச் சேர்ந்த கால்டுவெல் வேல்நம்பி ஆகியோரிடம் காசோலையை நடிகர் கமல்ஹாசன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், எழுத்தாளர் சுகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.