சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழக மீனவர்கள் மீதான கடற்படை தாக்குதல்: குண்டு பற்றிய கடற்படைத் தலைவரின் கூற்றாகச் சொல்லப்படுவது உண்மையல்ல!

தமிழக மீனவர்களைத் தாக்கியதாகச் சொல்லப்படும் குண்டு இந்திய கடற்படை பயன்படுத்தும் குண்டினை ஒத்திருக்கிறது என்று மண்டபம் கடற்படை தலைவர் கூறியதாகச் சொல்லப்படுவது உண்மையல்ல... 

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:11 pm

DIN

சென்னை: தமிழக மீனவர்களைத் தாக்கியதாகச் சொல்லப்படும் குண்டு இந்திய கடற்படை பயன்படுத்தும் குண்டினை ஒத்திருக்கிறது என்று மண்டபம் கடற்படை தலைவர் கூறியதாகச் சொல்லப்படுவது உண்மையல்ல என்று இந்திய கடற்படை மறுத்துள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த வாரம் 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் வலைகளை உலர்த்திக் கொண்டிருந்தனர். 

அப்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த ராணி அபாக்கா என்ற கப்பலில் இருந்த இந்திய கடற்படை வீரர்கள், மீனவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மீனவர்கள் தமிழில் பதில் அளித்துள்ளனர். 

ஆனால், கடலோர கடற்படை வீரர்கள் இந்திய மீனவர்கள் என்றால் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் பேச வேண்டும் எனக் கூறித் தாக்கியுள்ளனர். 

ஒரு கட்டத்தில் இலங்கை மீனவர்கள் என நினைத்து திடீரென ரப்பர் குண்டுகள் நிரம்பிய துப்பாக்கியால் கப்பற்படை வீரர்கள் சுடத் தொடங்கினர். இதில் பிச்சை ஆரோக்கியம்(38), ஜான்சன்(30) என்ற இரண்டு மீனவர்கள் காயமடைந்தனர். கரை திரும்பிய காயமடைந்தவர்கள் இருவரும் ராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என இந்திய கடலோர காவல்படையினர் மறுத்துள்ளனர்.அவர்களுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கருத்து தெரிவித்திருந்தார்.   

அதேநேரம் இந்திய கடலோர கடற்படை வீரர்களை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் தூப்பாக்கி சூடு நடத்திய கடற்படை வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் வருகின்றனர்.

அப்பொழுது தாக்குதலுக்கு உள்ளன படகிலிருந்து எடுக்கப்பட்ட ரப்பார் குண்டு குறித்து, 'தமிழக மீனவர்களைத் தாக்கியதாகச் சொல்லப்படும் குண்டு இந்திய கடற்படை பயன்படுத்தும் குண்டினை ஒத்திருக்கிறது' என்று மண்டபம் கடற்படை தலைவர் கூறியதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான சர்ச்சை மீண்டும் சூடு பிடித்தது.

இந்நிலையில் தற்பொழுது மண்டபம் கடற்படை தலைவர் அப்படிக் கூறவே இல்லை என்றும், கூறியதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல என்றும் இந்திய கடற்படை மறுத்துள்ளது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.