மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேலூர் அருகே நான்கு பள்ளி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை! 

பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் வேலூர் அருகே நான்கு பள்ளி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News image
Updated On :24 நவம்பர் 2017, 2:05 pm

DIN

வேலூர்: பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் வேலூர் அருகே நான்கு பள்ளி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றிக் கூறப்படுவதாவது:

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ளது பணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு பதினொன்றாம் வகுப்பில் பயின்ற மாணவிகள் ரேவதி, சங்கரி, தீபா மற்றும் மணிஷா ஆவர்.

படிப்பில் இவர்கள் சரியான அக்கறை காட்டாததன் காரணமாக பள்ளி ஆசிரியர்கள் நால்வரையும் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் பள்ளிக்கு பெற்றோர்களை அழைத்து வருமாறும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட நால்வரும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து உள்ளனர்.  கிணற்றில் இருந்து மாணவிகள் நான்கு பேரின் உடலும் மீட்கப்பட்டது. 

போலீசார் தற்பொழுது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நான்கு மாணவிகள் கூட்டாக தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.