பெங்களூரு அடுத்துள்ள மாராதஹள்ளி என்ற பகுதியில் செஸ்னா பிஸினஸ் பார்க்கில் சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது.
இதன் 9-ஆவது மாடியில் இருந்து குதித்து தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஓவியர் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து வய்ட்ஃபீல்ட் டிசிபி அப்துல் அஹத் கூறியதாவது:
பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்த சொகுசு விடுதியின் 9-ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் திங்கள்கிழமை காலை 11.15 மணியளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
முதல்கட்ட விசாரணையில் அவர் தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வி.வள்ளியம்மை (வயது 34) என்பது தெரியவந்துள்ளது.
ஓவியரான இவர், ஓவியப் பெட்டகத்துடன் அந்த 9-ஆவது மாடிக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக அவரது கணவர் மற்றும் குடும்பதினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாகவும் அப்பகுதி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவரின் குடும்பதினர் வந்த பிறகு அடுத்த கட்ட விசாரணை நடைபெறும்.
கடந்த 5 நாட்களில் மட்டும் இதே சொகுசு விடுதியில் இதுபோன்று 2-ஆவது தற்கொலைச் சம்பவம் நடந்துள்ளது. எனவே அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏப்.18 வரை மழைக்கு வாய்ப்பு!

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


