98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மின் புகார்கள் தெரிவிக்க 'வாட்ஸ்அப்' சேவை மையங்கள்

மழைக் காலங்களில் மின்சாரம் தொடர்பான புகார்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் தகவல் அளிக்க ஏதுவாக வாட்ஸ்-அப் சேவை மையங்களை மின்சார வாரியம் தொடங்கியுள்ளது.

Updated On :29 நவம்பர் 2017, 8:56 pm

மழைக் காலங்களில் மின்சாரம் தொடர்பான புகார்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் தகவல் அளிக்க ஏதுவாக வாட்ஸ்-அப் சேவை மையங்களை மின்சார வாரியம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மின்சாரம் சம்பந்தப்பட்ட புகார்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் தகவல் தெரிவிக்கும் வகையில் வாட்ஸ்-அப் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள், மின் உபகரணங்கள் பற்றிய புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை முழு முகவரி, புகாரின் தன்மை, இடம்/பகுதி மற்றும் புகைப் படத்துடன் கீழே தெரிவிக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்ட வாட்ஸ்-அப் எண்களுக்கு தெரியப்படுத்தலாம். பெறப்படும் தகவல்கள், தொடர்புடைய அலுவலகர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட வாரியான வாட்ஸ்-அப் எண்கள் கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.
மாவட்டம் வாட்ஸ்அப் எண் சென்னை 9445850829
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் 9444371912
ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் 9445851912
திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பெரம்பலூர், 
அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், 
நாகப்பட்டினம் மற்றும் கரூர் 9486111912
மதுரை, திண்டுக்கல், தேனி, 
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை 9443111912
விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் 9445855768
கோயம்பத்தூர், திருப்பூர், நீலகிரி 9442111912
திருநெல்வேலி, கன்னியாகுமரி, 
தூத்துக்குடி மற்றும் விருதுநகர் 8903331912
வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி 6380281341
மேற்கண்ட வாட்ஸ்அப் எண்கள் மின்வாரிய இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த வாட்ஸ்-அப் எண்கள் மூலம் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை முழு விவரத்துடன் தெரியப்படுத்தலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.