அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் அநேக இடங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
மத்திய கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். மேலும் மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...