யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

"அம்மா' திட்ட முகாமுக்கு வந்த விவசாயி மயங்கி விழுந்து சாவு

மேட்டுப்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமுக்கு வந்த விவசாயி மயங்கி விழுந்து இறந்தார்.

News image
'அம்மா' திட்ட முகாமில் மயங்கி விழுந்த விவசாயி சடகோபன்.
Updated On :20 அக்டோபர் 2017, 9:05 pm

DIN

மேட்டுப்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமுக்கு வந்த விவசாயி மயங்கி விழுந்து இறந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மேட்டுப்பாளையத்தில் மக்களைத் தேடி வருவாய்த் துறை எனும் "அம்மா' திட்ட முகாம் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சின்னப்பா தலைமை வகித்தார். முகாமில் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி கலந்து கொண்டு, அங்கன்வாடி மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். 
அப்போது மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சடகோபன், மாத்தூர் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயக் கடன்கள் வழங்குவதில்லை. இதனால் விவசாயிகள் அவதிப்பட்டு வருவதாகக் கூறி எம்எல்ஏ பழனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது மயங்கி விழுந்தார். 
இதையடுத்து முகாமில் இருந்த பண்ருட்டி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவரான செலின் வித்யா விவசாயி சடகோபனை பரிசோதனை செய்தார். சடகோபனுக்கு நாடித் துடிப்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியும் கூறினார். 
உடனடியாக அவரை மாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சடகோபன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மேட்டுப்பாளையம் பகுதி பொதுமக்கள் சோகம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.