விஜய்யின், மோடி வெறுப்பே மெர்சல்: எச். ராஜா குற்றச்சாட்டு

விஜய்யின், மோடி வெறுப்பே மெர்சல் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
விஜய்யின், மோடி வெறுப்பே மெர்சல்: எச். ராஜா குற்றச்சாட்டு
Updated on
1 min read

விஜய்யின், மோடி வெறுப்பே மெர்சல் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் மெர்சல்.  இந்தப் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதுகுறித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா டிவிட்டரில் கூறியிருப்பதாவது, 
மெர்சல் பட வசனம் விஜய் அவர்களின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுகிறது. முதலில் ஜிஎஸ்டி புதிய வரி அல்ல. சாராயத்திற்கு 58% மேல் வரி விதிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம். ஜோசஃப் விஜய்யின் மோடி வெறுப்பே மெர்சல். 

ஏற்கனவே நாடு முழுவதும் பள்ளி கல்வி மற்றும் மருத்துவம் அரசு பள்ளி மற்றும் அரசு மருத்துவமனையில் இலவசம் தான். விஜயின் வருமான வரி ஏய்ப்பு செய்தி பற்றி விளக்கம் எதிர்பார்க்கலாமா?. தமிழகத்தில் கடந்த 20  வருடங்களில் கட்டப்பட்ட சர்ச் 17500, மசூதிகள் 9700, கோவில்கள் 370. இப்ப எதை தவிர்த்து மருத்துவமனை கட்டணும் என்கிறார் விஜய். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com