சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பேரவைத் தலைவர் நோட்டீஸ்: 15 நாள்கள் அவகாசம் கேட்க திமுக எம்.எல்.ஏ.க்கள் முடிவு

சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அனுப்பிய நோட்டீஸூக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிப்பதற்கான கெடு செவ்வாய்க்கிழமை (செப்.5) முடிவடைகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:48 pm

DIN

சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அனுப்பிய நோட்டீஸூக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிப்பதற்கான கெடு செவ்வாய்க்கிழமை (செப்.5) முடிவடைகிறது. நோட்டீஸூக்கு விளக்கம் அளிக்க 15 நாள்கள் அவகாசம் கேட்க திமுக எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர்.
சட்டப்பேரவையில் குட்காவைக் காண்பித்தது குறித்து பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் கேட்டு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸூக்கு விளக்கம் அளிப்பதற்கான காலக்கெடு செவ்வாய்க்கிழமையுடன் (செப்.5) முடிவடைய உள்ளது. இந்நிலையில் நோட்டீஸ் பெறப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இறுதியில், பேரவைத்தலைவருக்கு எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக கடிதம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் ""பேரவைத் தலைவர் அனுப்பியுள்ள நோட்டீஸ் சட்டத்துக்கு உட்பட்டதாகத் தெரியவில்லை. அதனால், இதுகுறித்து விளக்கம் அளிக்க 15 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும்'' என்று கேட்க முடிவு செய்துள்ளனர்.
மேலும், மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.5) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க உள்ளனர். பேரவைத் தலைவரிடம் அவகாசம் கேட்டு திமுக சார்பிலும் செவ்வாய்க்கிழமை (செப்.5) கடிதம் கொடுக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.