மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம், சொத்து குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :5 செப்டம்பர் 2017, 8:50 pm

DIN

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம், சொத்து குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி அறிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பை எதிர்த்து முசிறியை சேர்ந்த தங்கவேலு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
அதில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவரின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது. அதனால் அதை நினைவு இல்லமாக மாற்றுவது தவறான முன் உதாரணமாகி விடும். எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் இந்த வழக்கு விளம்பரத்துக்காக போடப்பட்டுள்ளது என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் வேதா நிலையம் சொத்து குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதா என கேள்வியெழுப்பினர், மேலும் இது தொடர்பாக அரசின் கருத்தை தெரிவிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு (செப்.7) ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.