சென்னை: அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் இன்று தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை ஆணையருடன் 'திடீர்' ஆலோசனை நடத்துகிறார்.
தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தினை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக 'நீட்' தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.சமீபத்தில் நுங்கம்பாக்கத்தில் லயோலா கல்லூரிக்கு அருகே பள்ளி மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.
அதேபோல தங்களது பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு தொடர் போராட்டங்கள் மற்றும் மறியல் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது.
இந்நிலையில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் இன்று தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் மற்றும் காவல்துறை ஆணையர் விஸ்வநாதனுடன் 'திடீர்' ஆலோசனை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் போர்: 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!

பிரமிக்கத்தக்கக் கூடிய கேட்ச்..! தன்னையே பாராட்டிக்கொண்ட ஸ்ரேயாஷ்!

அமராவதி பாலியல் வழக்கு! யாருக்கு அதிக தோழிகள்? பந்தயம் கட்டிய குற்றவாளிகள்
மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


