வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப் பயப்படுகிறாரா ஸ்டாலின்? ஹெச்.ராஜா கிண்டல்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் பயப்படுகிறாரா  என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கேள்வி  எழுப்பியுள்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:51 pm

DIN

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் பயப்படுகிறாரா  என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கேள்வி  எழுப்பியுள்ளார்.

அதிமுகவில் இரு அணிகளாக இருந்து செயல்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியஇருவரும் சமீபத்தில் ஒன்றாக இணைந்தனர். உடனே அதிமுக அம்மா அணியின் துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 19 பேர் ஒன்றிணைந்து,முதல்வர் பழனிசாமி மீது தாங்கள் நம்பிக்கையிழந்து விட்டதாக கூறி ஆளுநர் வித்யாசாகர்ராவிடம் கடிதம் குடுத்தனர்.

ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான ஸ்டாலின் நேற்று கூட்டணிக்கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து சென்று பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவினை சந்தித்தார். ஆளுநரிடம் ஒரு கடிதத்தினையும் அவர் அளித்தார். 

அதில் அவர் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவினை இழந்து விட்ட எடப்பாடி பழனிசாமி அரசினை சட்டப்பேரவையினைக் கூட்டி உடனடியாக பெரும்பான்மையினை நிறைவேற்றச் சொல்ல வேண்டும், ஒருவாரத்திற்குள் அவ்வாறு நிகழா விட்டால், முதலில் நீதிமன்றத்தினையும்,அதன் பிறகு மக்கள்  மன்றத்தினையம் அணுகி நீதி பெறுவோம்.

இவ்வாறு ஸ்டாலின்  அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், 'ஸ்டாலின் ஏன் ஆளுநரை சந்தித்து அவருக்கு வெற்று மிரட்டல்கள் விடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆளுநருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக ஸ்டாலின் ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கூடாது? ஏன் பயப்படுகிறார்?

இவ்வாறு ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.