மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கை துவங்கி விட்டது: தமிழக அரசு 

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கை துவங்கி விட்டது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:53 pm

DIN

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கை துவங்கி விட்டது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கையினை இழந்து விட்டதாகக் கூறி டிடிவி தினகரன் தலைமையிலான 19 எம்.எல்.ஏக்கள் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். அந்த மனு மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் , ஆளுநர் அமைதி காத்து வருகிறார்.

இந்நிலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சட்டப்பேரவையினை உடனடியாகக் கூட்டி தமிழக அரசு பெரும்பான்மையினை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அரசு மீது நம்பிக்கையிழந்து விட்டதாக அவர்கள் தெரிவித்ததற்கு விளக்கமளிக்குமாறு கோரி, சபாநாயகர் தனபால்  அளித்த நோட்டிஸிற்கு பதில் அளிக்க இன்றுதான் கடைசி நாள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இன்று காலை முதல்வர் பழனிசாமியும், சபாநாயகர் தனபாலும் ஆலோசனை செய்தனர்.      

எனவே எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை தங்கள் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தவிடக் கோரி இருந்தனர்.

ஆனால் மனுவினை விசாரித்த நீதிபதி, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணனிடம், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சட்டப்பேரவை செயலரிடம் ஆலோசித்து தகவல் தெரிவிக்குமாறு உத்தர விட்டனர்.  இதற்காக இன்று மாலை வரை அவகாசமும் வழங்கியுள்ளனர். 

இந்நிலையில் இன்று மதியம் நீதிமன்றம் கூடியதும் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் அரசின் பதிலை சமர்ப்பித்தார். அதில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கை துவங்கி விட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் சட்டசபையின் மரபுப்படி சபாநாயகர் எடுக்கும் முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று ம் வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதே சமயம் இதே போன்ற வேண்டுகோளுடன் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவுடன் இந்த மனுவினை இணைத்து விசாரிக்க வேண்டும் என்ற எதிர் மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்றும் தலைமை வழக்கறிஞர் வேண்டுகோள் வைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.