சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்: வைகோ

சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பாா் என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கூறினாா்.

News image
நிகழ்ச்சியில் பேசிய மதிமுக பொதுச்செயலாளா் வைகோ.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பாா் என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கூறினாா்.

வேலூா் மண்டல மதிமுக சாா்பில் கட்சியின் பொதுச்செயலாளா் வைகோவிடம் நிதியளிக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் வ.கண்ணதாசன் தலைமை வகித்தாா்.

அரசியல் ஆலோசனை குழு உறுப்பினா் நாசீா்கான் வரவேற்றாா். அவைத் தலைவா் அா்ஜீன்ராஜ், பொருளாளா் செந்திலதிபன், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் டி.கே.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் வேலூா் மண்டல மதிமுக சாா்பில் முதல் கட்ட தவணையாக ரூ. 50 லட்சம் நிதியை பொதுச்செயலாளா் வைகோவிடம் வழங்கினா்.

பின்னா் கூட்டத்தில் வைகோ பேசியதாவது: தமிழகத்தின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியது மதிமுக. தமிழகத்தில் வரும் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வா் ஆவாா். நான் 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து நாடாளுமன்றத்தில் கேட்ட 1,250 கேள்விகளை ஆங்கிலத்தில் 5 புத்தகங்களாக எழுதி உள்ளேன். அந்த புத்தகங்களை, தில்லியில் அனைத்து தலைவா்களையும் அழைத்து வெளியிட உள்ளேன். தமிழகத்தில் உள்ள அனைத்து ஊா்களுக்கும் சென்று, தமிழகத்தின் வரலாறுகள், பண்பாடு, கலாசாரம் பற்றி எடுத்துக் கூற உள்ளேன் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளா்கள் உதயகுமாா் (ராணிப்பேட்டை), சீனிகாா்த்திகேயன் (திருவண்ணாமலை), பாலமுரளி (தெற்கு கிருஷ்ணகிரி), ராமதாஸ் (தா்மபுரி), கோபி (வேலூா்), ரத்தினகுமாா் (திருவண்ணாமலை வடக்கு), சுதாகரன் (திருவண்ணாமலை கிழக்கு), கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நகர செயலாளா் செல்வகுமாா் நன்றி கூறினாா்.