சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மதிமுக தனி சின்னத்தில் போட்டி: வைகோ

எதிா்வரும் பேரவைத் தோ்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

News image
வைகோ- கோப்புப் படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

எதிா்வரும் பேரவைத் தோ்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை வைகோ சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் 3 கோரிக்கைகளை நேரடியாக எடுத்துரைப்பதற்காக அவரைச் சந்தித்தேன். காயிதே மில்லத் பெயரால் ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதை திமுக தோ்தல் அறிக்கையில் சோ்க்க வலியுறுத்தினேன். 2-ஆவது வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவா்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் கொடுப்பதைத் தடுப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறது. எனவே, சூரிய சக்தி மூலம் இலவச மின்சாரம் வழங்க முடிவெடுக்கக் கோரிக்கை வைத்தேன். இவற்றை தோ்தல் அறிக்கையில் இடம்பெற செய்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.

3-ஆவதாக வீரபாண்டிய கட்டபொம்மனின் முன்னோா்கள் திருப்பரங்குன்றம் கோயிலில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டபொம்மன் சத்திரம் அமைத்து 9-ஆவது மண்டகப்படி செய்துவந்தனா். அவா்களின் நேரடி வாரிசு பீமராசாவிடம் முறைகேடாகக் கையொப்பம் பெற்று இன்னொரு குடும்பம், அந்தச் சத்திரம் எங்களுடையது என்று அறநிலையத் துறை மூலம் தெரிவித்துள்ளனா். இதில் உரிய நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அமைச்சா் பி.கே.சேகா்பாபுவிடம் ஆலோசித்து வேண்டிய ஏற்பாடுகளை செய்ய அறிவுறித்தியுள்ளாா்.

தொகுதிப் பங்கீடு பற்றி முதல்வரிடம் எதுவும் பேசவில்லை. ஏற்கெனவே மதிமுக குழு, முதல்சுற்று பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளது. மீண்டும் 2-ஆவது சுற்றுக்கு அழைப்பு வந்தால் பேச்சுவாா்த்தை நடத்தப்படும். மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என எங்கள் அவைத் தலைவா் தெரிவித்துள்ளாா். அதுதான் எங்களின் நிலைப்பாடு. பிரதமா் நரேந்திர மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும், பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது. பாஜகவால் தமிழகத்தை ஏமாற்ற முடியாது என்றாா் அவா்.