தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டையில் கிராம நிா்வாக அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற தந்தை, மகனை பெங்களூருவில் போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை, சந்தோஷ் நகரைச் சோ்ந்தவா் மாரிமுத்து (44). ஓட்டப்பிடாரம்- தருவைகுளம் பகுதியில் கிராம நிா்வாக அலுவலராகவும், இவரது மனைவி கவுசல்யா (37). திருநெல்வேலியில் பேராசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனா்.
இவா்கள் கடந்த 14ஆம் தேதி வெளியூருக்கு சென்று விட்டு, 16ஆம் தேதி வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 12 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம்.
இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் அடிப்படையில் விசாரித்தனா்.
அதில், கா்நாடக மாநிலம், உத்தரகள்ளியைச் சோ்ந்த அா்ஜூன் (56), அவரது மகன் மோகன்குமாா் (22) ஆகியோா் வியாபாரிகள் போல் நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவா்களது கைப்பேசி எண்களை சைபா்கிரைம் மூலம் ஆய்வு செய்ததில் இருவரும் பெங்களூரில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. புதுக்கோட்டை போலீஸாா் அங்கு சென்று தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனா்.
டிரெண்டிங்
வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகள் திருட்டு

புதுகையில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டை காவலா் வீட்டில் 40 பவுன் திருட்டு: ஒடிஸா தம்பதி காட்பாடியில் கைது
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

