அதிமுக எனும் மூழ்கும் கப்பலில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ஏறமாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் கூட்டம், சு.திருநாவுக்கரசர் தலைமையில் சத்தியமூர்த்திபவனில் புதன்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, கொறடா விஜயதரணி, எச்.வசந்தகுமார் உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு சு.திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியது: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகாவது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் தேர்தல் வர உள்ளதால் அரசியல் உள்நோக்கத்துடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. தமிழகத்துக்குத் துரோகம் இழைக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் கூறியிருப்பதை வரவேற்கிறோம். தற்போது இடைக்கால உத்தரவுதான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முடிவை எடுப்போம்.
உண்மை இல்லை: காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை அதிமுக இழுக்க முயற்சிக்கிறது என்பதில் உண்மை இல்லை. அதிமுக ஏற்கெனவே மூழ்கும் கப்பலாக இருந்து வருகிறது. அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏறமாட்டார்கள். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் மாநிலச் சுயாட்சி மாநாட்டில் பங்கேற்கும் கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைக்குமா என்பதை இப்போதே சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
பேட்டியின்போது, காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

தஞ்சையில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

குஜராத் துறைமுகம் வரும் 22 கப்பல்கள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

