விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

15 நாள்களுக்குள் இரட்டை இலை எங்களுக்குக் கிடைத்துவிடும்: ஆர். வைத்திலிங்கம் பேட்டி

இரட்டை இலை சின்னம் 15 நாள்களுக்குள் எங்களுக்குக் கிடைத்துவிடும் என்றார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம்.

Updated On :24 செப்டம்பர் 2017, 9:11 pm

இரட்டை இலை சின்னம் 15 நாள்களுக்குள் எங்களுக்குக் கிடைத்துவிடும் என்றார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டது. ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஒன்றுபட்ட இயக்கமாக சிறப்பாகச் செயல்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நடத்திய பொதுக்குழுவை நடத்தி, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளோம். இன்னும் 15 நாள்களில் இரட்டை இலை சின்னம் எங்களுக்குக் கிடைத்துவிடும். உண்மையான அதிமுக நாங்கள்தான் என நிரூபிப்போம். இனிமேல் வருகிற உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் என எந்தத் தேர்தல் வந்தாலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தபோது எப்படி வெற்றி பெற்றோமோ, அதேபோல வெற்றி பெறுவோம். 
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விடியோ ஆதாரம் இருப்பதாக டி.டி.வி. தினகரன் கூறினால், அதை அவர் வெளியிட வேண்டும் என்றார் வைத்திலிங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.