சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அடுத்த 2 நாட்களில் வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 நாட்களில் வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:43 pm

DIN


சென்னை: அடுத்த 2 நாட்களில் வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், மத்திய மேற்கு வளிமண்டலத்தில் உருவாகியிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது.

அடுத்த இரு தினங்களைப் பொறுத்தவரை வட தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. கன மழை என்று எடுத்துக் கொண்டால் வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இடைவெளி விட்டு விட்டு மிதமான மழை பெய்யும்.

தென்மேற்குப் பருவ மழையை எடுத்துக் கொண்டால், ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 25 வரையிலான கால அளவில் 39 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 31 சதவீதம் அதிகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.