தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஜெயலலிதாவை பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

News image
Updated On :26 செப்டம்பர் 2017, 5:52 am

DIN

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை  நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என சில அமைச்சர்கள் கூறியிருந்த நிலையில், தான் உள்பட உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்ததாக செல்லூர் ராஜு கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி, சட்னி சாப்பிட்டார் என பொய் கூறியதாக திண்டுக்கல் சீனிவாசன் சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.