சென்னை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போஸின் தேர்தல் ஆவணங்களில் ஜெயலலிதா கைரேகை இடம்பெற்றது தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணைய செயலர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதி இடைதேர்தல்கள் நடைபெற்றது. அப்பொழுது அதிமுக பொதுச் செயலாளர் என்கின்ற வகையில் வேட்பாளர்களுக்கான 'பார்ம் பி' படிவத்தில், அரசு மருத்துவர்கள் முன்னிலையில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது.
பின்னர் நடைபெற்ற தேர்தலில் திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் போஸ் வெற்றி பெற்றார். அப்பொழுது அவருக்கு எதிராக போட்டியிட்டு தோற்ற திமுகவின் சரவணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்றது.
அப்பொழுது நீதிமன்றம், 'அதிமுக வேட்பாளர் போஸ் வேட்புமனுவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட 20 ஆவணங்களுடன், தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி அந்த வழக்கில் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியும் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தேர்தல் ஆவணங்களில் ஜெயலலிதா கைரேகை இடம்பெற்றது தொடர்பான வழக்கில் தலைமைத் தேர்தல் ஆணையரின் முதன்மைச் செயலர், வரும் அக்டோபர் 6-ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


