மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அதிமுகவின் திசையை தீர்மானிக்க காலம் தந்த தலைவன் டி.டி.வி.தினகரன்: நாஞ்சில் சம்பத்

அதிமுகவின் திசையை தீர்மானிக்க காலம் தந்த தலைவன் டி.டி.வி.தினகரன் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

News image
Updated On :19 ஏப்ரல் 2017, 2:20 am

சென்னை: அதிமுகவின் திசையை தீர்மானிக்க காலம் தந்த தலைவன் டி.டி.வி.தினகரன் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

சென்னையில் டி.டி.வி. தினகரன் அடையாறு இல்லத்தில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பிறகு அதிமுக அம்மா அணி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தினகரன் தலைமையில் தான் அதிமுக செயல்படும். இந்தக் கட்சியை வலுவோடும் பொலிவோடும் தினகரன் வழி நடத்துவார்.

தில்லியில் இருக்கும் பாஜகவின் அற்பத்தனமான மிரட்டுலுக்கு பயந்து ஆதாயச் சூதாடிகள் எடுக்கிற முடிவுகள் எங்களைக் கட்டுப்படுத்தாது.

அதிமுக உடையவில்லை. ஜெயக்குமாரை நிதி அமைச்சராக உட்கார வைத்து அழகு பார்த்ததே தினகரன் தான். தினகரன் தலைமையில் அதிமுக விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.