தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

இலவச மின்சாரம் யார் ஆட்சியில் அறிமுகம்?

இலவச மின்சாரம் யாருடைய ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்கப்பட்டது. பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது செவ்வாய்க்கிழமை

Updated On :21 மார்ச் 2017, 7:56 pm

இலவச மின்சாரம் யாருடைய ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்கப்பட்டது. பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதம்:
கணேசன் (திமுக): இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதிதான்.
அமைச்சர் ஜெயகுமார்: எம்.ஜி.ஆர்.தான் அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன்: எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஒரு குதிரை சக்தி மின் மோட்டாருக்கு ரூ.25 என்ற குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தேர்தல் வரும்போது உங்களால் கூறப்பட்ட வார்த்தைதான் இலவச மின்சாரம்.
அமைச்சர் ஜெயக்குமார்: சட்டப் பேரவையில் ஏற்கெனவே இந்தப் பிரச்னை பற்றி பல முறை விவாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001-2006-ஆம் ஆண்டில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த போது விவாதித்துள்ளேன். இது தொடர்பான அரசு ஆவணங்களையும், அரசாணையையும் காட்டத் தயார். அதற்கு கணேசன் பொறுப்பேற்றால் சரி.
கணேசன்: 1989-90-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.