வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.
கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இருப்பினும் மேற்கு வங்கம் முதல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நிலப்பரப்பில் காற்றின் மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையின் காரணமாக சில இடங்களில் மழை பெய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 70 மி.மீ., கரூர் மாவட்டம் பரமத்திவேலூர், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம், சேலம் மாவட்டம் சங்ககிரி ஆகிய இடங்களில் 30 மி.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கேட்டி, கோத்தகிரி, நடுவட்டம் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கவே செய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: கடற்காற்று வீசாமல் நிலப்பகுதியில் தரைக்காற்று வீசுவதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். இருப்பினும் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றார் அவர்.
4 இடங்களில் சதம்: செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் 4 இடங்களில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்): வேலூர், திருச்சி, சேலம், பாளையங்கோட்டை - 100, கரூர் பரமத்தி - 99, சென்னை, மதுரை, திருப்பத்தூர் - 98.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இலவச ரேபிஸ் தடுப்பூசி: இந்திய மருத்துவத் துறையைப் பாராட்டிய ஜெர்மன் பயணி!

அபிஷேக் சர்மா அதிரடி: பஞ்சாப் கிங்ஸுக்கு 220 ரன்கள் இலக்கு!

வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்

தியேட்டரில் ரசிகர்களுடன் பிரதீப் ரங்கநாதன் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

