உதகை குதிரைப் பந்தயம் வரும் மே 12-ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 14-ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு மட்டும் இப் பந்தயங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதகையில் கோடை சீசனையொட்டி ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் வரை குதிரைப் பந்தயங்கள் நடைபெறும்.
வார நாள்கள் மற்றும் வார இறுதி நாள்களுமாக சுமார் 28 நாள்கள் வரை நடைபெற்று வந்த இப் பந்தயங்களில் நடப்பாண்டில் ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப் பதிலாக மே மாதம் 12-ஆம் தேதிதான் குதிரைப் பந்தயங்கள் தொடங்குகின்றன.
உதகை குதிரைப் பந்தய மைதானத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது, அதற்கான சீரமைப்புப் பணிகளுக்காக மைதானம் பாழ்படுத்தப்பட்டு விட்டதால், குதிரைப் பந்தயம் தொடங்குவதிலும் தாமதம் ஏற்படுவதாக குதிரைப்பந்தய சங்கத்தினரால் கூறப்படுகிறது.
இவ்வாண்டில் குதிரைப் பந்தயம் நடைபெறுவதே கேள்விக்குறியாக இருந்த சூழலில், தற்போது மே மாதம் 12-ஆம் தேதியிலிருந்து ஜூன் 14-ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு மட்டும் குதிரைப் பந்தயங்களை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகிகள் 'தினமணி' செய்தியாளரிடம் கூறியதாவது:
முதல் நாள் பந்தயம் மே மாதம் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. 17-ஆம் தேதி இரண்டாம் நாள் பந்தயமும், மே 18-ஆம் தேதி 1,000 கினியாஸ் நீலகிரி கிரேடு 3-க்கான போட்டிகளும் நடைபெற உள்ளன. நான்காம் நாள் பந்தயம் மே 22-ஆம் தேதியும், ஐந்தாவது நாள் பந்தயமாக மே 25-ஆம் தேதி நீலகிரி 2,000 கினியாஸ் கிரேடு 2-க்கான பந்தயமும், 6-ஆம் நாள் பந்தயம் ஜூன் 1-ஆம் தேதியும் நடைபெற உள்ளன.
7-ஆம் நாள் பந்தயம் ஜூன் 3-ஆம் தேதியும், 8-ஆம் நாள் பந்தயமாக ஜூன் 8-ஆம் தேதி நீலகிரி டெர்பி ஸ்டேக்ஸ் கிரேடு-1 பந்தயமும் நடைபெற உள்ளன.
9-வது நாள் பந்தயம் நீலகிரி தங்கக் கோப்பைப் பந்தயமாக ஜூன் 10-ஆம் தேதியும், இறுதி நாள் பந்தயங்கள் ஜூன் 14-ஆம் தேதியும் நடைபெற உள்ளன என்று தெரிவித்தனர்.
இப் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள குதிரைகளும், அதற்கான பயிற்சியாளர்கள், ஜாக்கிகளும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப் பின்னர் உதகைக்கு வரவுள்ளனர்.
இதனிடையே, நடப்பாண்டில் உதகை குதிரைப் பந்தயங்கள் நடைபெறும் நாள்களின் எண்ணிக்கை 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது ரேஸ் பிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (25.06.2026) - கடகம்

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.65! 11 காசுகள் உயர்வு!

கூகுள் குரோமில் விமானம் ஓட்டும் அனுபவம்! பெறுவது எப்படி?

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



