கூகுள் குரோமை பயன்படுத்தி விமானம் ஓட்டும் அனுபவத்தைப் பெறும் வகையிலான மேம்படுத்தப்பட்ட அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
இதுவரை கணினியில் சிறப்பு மென்பொருள்களில் மட்டுமே கிடைத்த விமான இயக்கி வசதியை இனி, கூகுள் எர்த் மூலம் பெறலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.
இதற்காக எந்தவொரு பிரத்யேக செயலியையும் தரவிறக்கம் செய்யாமல், இணையம் மூலமே earth.google.com என்ற இணைய முகவரியில் சென்று விமானம் இயக்கும் அனுபவத்தை பயனர்களால் பெற முடியும்.
உலகின் அனைத்துப் பகுதிகளையும் 3டி முறையில் படம்பிடித்து தரவுகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், எந்தவொரு பகுதிக்கும் விமானத்தை இயக்கிச் செல்லும் அனுபவத்தைப் பெறலாம்.
இதற்காக கூகுள் எர்த் இணையதளப் பக்கத்தை திறந்து, டூல்ஸ் பகுதியில் உள்ள விமான இயக்கி வசதியை (Flight Simulator) தேர்வு செய்வதன் மூலம் விமானத்தை இயக்கும் அனுபவத்தை பெற முடியும்.
விமான பயிற்சிக்காக இந்த வசதி அறிமுகம் செய்யப்படவில்லை. மாறாக விமானத்தை இயக்கும் அல்லது விமானத்தில் பறக்கும் அனுபவத்தை பயனர்கள் பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த வசதியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு முன்பு விசைப்பலகை பொத்தான்களைப் பயன்படுத்தி 2007 டெஸ்க்டாப் வெர்ஷனில் இந்த அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது earth.google.com என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி விமானம் இயக்கும் அனுபவத்தைப் பெறுவதை கூகுள் எளிமையாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Google Earth’s Hidden Flight Simulator Is Now Playable in Web Browsers
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் பரபரப்பு

சூறைக்காற்றுடன் பலத்த மழை: சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் குறைப்பு! காரணம் என்ன?

துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




