பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

சாட் ஜிபிடியில் எவ்வளவு விரிவான பதில் வேண்டும்? இனி பயனரே முடிவு செய்யலாம்!

கேட்கும் கேள்விகளுக்கு சாட் ஜிபிடியில் எவ்வளவு விரிவான பதில் வேண்டும் என்பதை பயனர்களே இனி தீர்மானிக்க முடியும்.

OpenAI ChatGPT

ஓபன் ஏஐ - கோப்புப் படம்

Published On :

ஓபன் ஏஐ நிறுவனத்தின் செய்யறிவு தளமான சாட் ஜிபிடியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எவ்வளவு விரிவான பதில் வேண்டும் என்பதை பயனர்களே இனி தீர்மானிக்க முடியும்.

கேள்வி கேட்ட பிறகு கொடுக்கும் உள்ளீட்டு பொத்தானை அழுத்திப் பிடித்தால் எவ்வளவு விரிவான பதில் வரை வேண்டும் என்பதை பயனர்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் வாரத்திற்கு 100 மில்லியன் (10 கோடி) பயனர்கள் சாட் ஜிபிடியை பயன்படுத்துகின்றனர். உலக அளவிலான பயன்பாட்டில் இது 11% ஆகும்.

சாட் ஜிபிடியின் மூலம் ஏராளமான தகவல்களைப் பெறும் பயனர்கள், இனி அந்த தகவல்கள் எந்த அளவுக்கு விரிவாக வேண்டும் என்பதையும் நிர்ணயம் செய்துகொள்ளலாம்.

அதாவது உடனடியாகத் தேவைப்படும் பதில்களுக்கு, விரிவான பதில்கள் தேவைப்படாதபோது, இந்த புதிய அம்சத்தை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சாட் ஜிபிடி செயலியில் கேள்வியை உள்ளீடு செய்ய அழுத்த வேண்டிய பொத்தானை ஒருமுறை அழுத்தி விட்டுவிடாமல், நீண்ட நேரம் அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்தால் பதில் எவ்வளவு விரிவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக்கொள்ளலாம்.

இதேபோன்று எளிமையான கேள்விகளுக்கும் எவ்வளவு விரிவான பதில் வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம். பதில்களை பகுப்பாய்வு செய்து பதில்களை சாட் ஜிபிடி வழங்கும்.

சாட் ஜிபிடி 5.5 பதிப்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்களின் கேள்விகளுக்கு முன்பை விட சுருக்கமாக பதில் வழங்கும் வகையிலும் தவறான தரவுகளை குறைக்கும் வகையிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Summary

How detailed should the response from OpenAI ChatGPT be Now user can decide

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.