தமிழகத்தில் வியாழக்கிழமை 40 சதவீதப் பேருந்துகளே இயக்கப்பட்டன என தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் தொமுச பொருளாளர் கி.நடராஜன், சிஐடியு பொதுச் செயலர் சுகுமாறன், ஏஐடியுசி பொதுச் செயலர் டி.எம்.மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பங்கேற்ற நூற்றக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தங்கவைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
அப்போது அரசுப் பேருந்துகள் இயக்கம் குறித்து தொமுக பொருளாளர் கி.நடராஜன் கூறியது:
தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்தவாறு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பெருமளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 40 சதவீதப் பேருந்துகள் மட்டுமே மாநிலம் முழுவதும் இயக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் போராட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர் என்றார் நடராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகைகள் எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்: நித்யா மெனன்

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

பவானி - துபைக்கு ரூ. 10,000! அரசுப் பேருந்து டிக்கெட்டால் அதிர்ச்சி!

அரசுக் கலைக் கல்லூரிகளில் அதிக விண்ணப்பம் வந்திருக்கும் படிப்பு இதுதான்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


